நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
நகைக்கடைக்கு மோசடியாக நிலம் விற்ற வழக்கு: திமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
x
திருவண்ணாமலையில் தனியார் நகைக்கடை நிறுவனத்திடம், திமுக பிரமுகர் பன்னீர் செல்வம் என்பவர் போலி வில்லங்க சான்று மூலம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்றார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தில்  பங்கு இருப்பதாக ராதா என்ற பெண் கூறி உள்ளார். இப்பிரச்சினையை தீர்க்க மேலும் 1 கோடி ரூபாய் கேட்டு பன்னீர் செல்வம் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில், பன்னீர் செல்வம், அவரது மனைவி மாதவி மற்றும் ராதா ஆகியோர் கூட்டாக சேர்ந்து நாடகமாடி நிலத்தை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து புகாரின் பேரில், பன்னீர் செல்வம், மனைவி மாதவி, கூட்டாளி ராதா ஆகியோர் மீது மோசடி, கூட்டுசதி, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்