யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: ரூ.5,000 கோடி லஞ்சம் பெற்றுள்ள ராணா கபூர் - அமலாக்கத்துறை விசாரணையில் தகவல்

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றிருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: ரூ.5,000 கோடி லஞ்சம் பெற்றுள்ள ராணா கபூர் - அமலாக்கத்துறை விசாரணையில் தகவல்
x
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றிருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. யெஸ் வங்கி திவாலாகும் நிலையில் ரிசர்வ் வங்கி கைப்பற்றி, நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கியின் நிதி மோசடிகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது . இந்த நிலையில் யெஸ் வங்கி அளித்த சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களுக்கு ஆதாயமாக ராணா கபூர் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர, டெல்லியில் முக்கிய இடங்களிலும்,  வெளிநாடுகளிலும் வீடுகளையும் லஞ்சமாக பெற்றுள்ளார் என்றும் அமலாக்கதுறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்