"சிஏஏ போராட்டம் - சட்டம், ஒழுங்கு பாதிப்பில்லை" - தமிழக அரசு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிஏஏ போராட்டம் - சட்டம், ஒழுங்கு பாதிப்பில்லை - தமிழக அரசு
x
சிஏஏ போராட்டத்திற்கு, ஆதரவாகவும், எதிராகவும் தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது

இதையடுத்து, போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோதமாக போராடியதாக சென்னையில் மட்டும் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய தமிழக அரசு, பேச்சுவார்த்தையை அடுத்து சிலர் கலைந்து செல்வதாகவும் கூறியது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 


Next Story

மேலும் செய்திகள்