மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயற்சி - இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தால் பரபரப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இஸ்லாமியர்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றக்கோரி, சேலம் கோட்டை மைதானத்தில் கடந்த 24 நாட்களாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், இஸ்லாமிய அமைப்பினர் ஏராளமானோர், பாத்திரங்கள், பாய், தலையனை உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில்  ஈடுபட முயன்றனர். அவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து  ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்