டிக் டாக் -ல் கலக்கும் குழந்தைகள், முதியவர்கள் - முறையாக பயன்படுத்துவோரை தூக்கிவிடும் டிக்டாக்

டிக்டாக்கால் சீரழிந்த குடும்பம், வாழ்க்கையை இழந்த நபர்கள் என தினந்தோறும் ஒரு செய்தி வெளியாகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதே செயலியில் வயது வரம்பின்றி நடிப்பின் மூலம் பல உயரங்களை தொட்டுள்ள சில டிக்டாக் நட்சத்திரங்கள் உங்கள் பார்வைக்கு....
டிக் டாக் -ல் கலக்கும் குழந்தைகள், முதியவர்கள் - முறையாக பயன்படுத்துவோரை தூக்கிவிடும் டிக்டாக்
x
டிக்டாக்... பல பாலியல் குற்றங்கள், தம்பதிகளுக்குள் ஏற்படும் தகராறு, சாதிய வன்முறைகள் என பல முக்கிய பிரச்சினைகளுக்கு இந்த டிக் டாக் தொடக்கப்புள்ளி இங்கு தான் வைக்கப்படுகிறது....

இதன் காரணமாக டிக்டாக் செயலியை பயன்படுத்தி பார்க்காத பலருக்கு, இந்த பெயரை கேட்டாலே ஏதோ அபாயகரமான செயலி என்றே தோன்றும்... தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் இது நிதர்சனமும் கூட... 

ஆனால் டிக் டாக் செயலியை முறையாக பயன்படுத்தும் பலர், எதிர்பாராத உச்சங்களை தொட்டதையும், தொட முயற்சித்து கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது... 

ஆறிலிருந்து மன்னிக்கவும், அரைவயதில் இருந்து அறுபது வயதை தாண்டியும் வயது வித்தியாசமின்றி இந்த செயலியில் திறமைகளை வெளிப்படுத்தி மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்தும் பலரும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்... 

ஜோசிகாமாயாகுட்டி என்ற ஐடியில் கலக்கி வரும் இந்த சிறுமி கிட்டதட்ட 9 லட்சம் பாலோவர்ஸை தனதாக்கி கொண்டுள்ளார்.  

என்னதான் கோபம், அழுகை, வேடிக்கை என சிறுமியின் திறமையை வெளிக்காட்டினாலும், சிறுமி அணியும் வித விதமான காஸ்டீயூம்களில் பெற்றோரின் பங்களிப்பையும் உணர முடிகிறது... 

டிகேசி பேபி என்ற பெயரில் டிக்டாக் வாசிகளை வாயை பிளக்க வைத்துகொண்டிருக்கும் இந்த குழந்தையை, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இரண்டரை வயதில் வாய்ப்பேசவே முடியாமல் தவித்துகொண்டிருக்கும் பல குழந்தைகளுக்கு மத்தியில் டிக்டாக்கில் சரியாக லிப்சிங் மற்றும் எக்ஸ்பிரசன் கொடுத்து பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது இந்த குட்டி சுட்டி

பால்குடி மறவா குழந்தைகள் மட்டுமல்ல, பல முதியவர்களும் இந்த செயலியில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில், தவுபிக்24 என்ற ஐடியில் தன் பாட்டியுடன் டிக்டாக் செய்து வருகிறார் ஒரு இளைஞர்... இந்த பாட்டி பேரன் ஜோடியை 11 லட்சம் பேருக்கும் மேல் பின் தொடர்கின்றனர்... மாஸ், கிளாஸ், காமெடி,டிராஜடி என தன் முக பாவனைகள் மற்றும் காஷ்டீயூம்களால் சினிமா ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கிறார் இந்த மூதாட்டி

இதேபோல அக்‌ஷய்பார்த்தா என்ற ஐடியில் தன் பாட்டியுடன் வீடியோ வெளியிட்டு வரும் இளைஞர், கிட்டத்தட்ட 6 லட்சத்து 35 ஆயிரம் பேரை ரசிகர்களாக்கியுள்ளார். பாட்டியுடன் சேர்ந்து மக்களை மகிழ்வித்துவரும் இவர், அனிருத்துடன் சந்திப்பு, கல்லூரி விழாக்களில் சீப் கெஸ்ட் என பல உயரங்களை தொட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்