கொரோனா : இந்தியாவில் 51 இடங்களில் பரிசோதனை கூடம் - தமிழகத்தில் 7 ரத்தமாதிரிகள் சேகரிக்கும் மையங்கள்

இந்தியாவில் 51 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை கூடம் அமைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா : இந்தியாவில் 51 இடங்களில் பரிசோதனை கூடம் - தமிழகத்தில் 7 ரத்தமாதிரிகள் சேகரிக்கும் மையங்கள்
x
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கொரோனா பரிசோதனை மையம் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் மையங்களை விரைவில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை  சென்னை மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை கூடம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. மதுரை, சேலம், திருவாரூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோவை, சென்னை ஆகிய ஏழு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்