மானிய கோரிக்கை மீதான விவாதம் - தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

அரசு துறைகளின் மானிய கோரிக்கை பற்றி விவாதிக்க தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது.
மானிய கோரிக்கை மீதான விவாதம் - தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது
x
தமிழக சட்டப்பேரவையில், 2020-21-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை  கடந்த மாதம் 14-ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்று கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில், நாளை முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வை நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தொடரின் முதல் நாளான நாளை, மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், மற்றும் எம்எல்ஏக்கள் கேபிபி .சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும், முன்னாள் எம்எல்ஏ சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பும் தெரிவிக்கப்படும். இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும். Next Story

மேலும் செய்திகள்