அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் - தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு என வேதனை

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் - தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு என வேதனை
x
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு, தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை  கொண்டு தனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியவர் அன்பழகன் என்று குறிப்பிட்டுள்ளார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் உற்ற தோழராகவும், திராவிட இயக்க  கொள்கைகளில் இருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர் அன்பழகன் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்