"பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
x
தமிழகத்தில்  பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  மதுரை மாவட்டம் புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைப்பதாக தெரிவித்துள்ளார். கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்டோர், துணை நின்றோர் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்