மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து 3க்கும் ஒரே டிக்கெட் - உலக வங்கி உதவியுடன் திட்டத்தை செயல்படுத்த முடிவு?

சென்னையில் ஒரே பயண அட்டையில் மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் மாநகரப் பேருந்து ஆகிய மூன்றிலும் பயணிக்கும் வசதி விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து 3க்கும் ஒரே டிக்கெட் - உலக வங்கி உதவியுடன் திட்டத்தை செயல்படுத்த முடிவு?
x
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, மின்சார ரயில், மற்றும் மாநகர பேருந்துகள் ஆகிய மூன்றும் பல சந்திப்புகளில் ஒருங்கிணைந்த சேவையாக இருக்கின்றன. ஆகையால் ரயிலில் பயணிப்போர் பேருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். இவை மூன்றிலும் பயணிப்போர் ஒவ்வொரு சேவையை பெறவும் தனித்தனியே பயணச்சீட்டு  எடுக்க வேண்டி உள்ளது. இதற்கு  மாற்றாக  மூன்று சேவையையும் பொதுவான ஒரு பயண அட்டையில் பெறும் வசதியை உருவாக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று உலக வங்கி அதிகாரிகளுடன் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், மெட்ரோ ரயில் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இதனிடையே உலக வங்கி உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த விரைவில் முயற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்