சாலையோரம் கொட்டப்படும் வாழை சருகுகள் - வாகன ஓட்டிகள் அவதி

சத்தியமங்கலம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் வாழை சருகுகளுக்கு தீ வைத்து எரிப்பதால் நெடுஞ்சாலை புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
சாலையோரம் கொட்டப்படும் வாழை சருகுகள் - வாகன ஓட்டிகள் அவதி
x
சத்தியமங்கலம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் வாழை சருகுகளுக்கு தீ வைத்து எரிப்பதால், நெடுஞ்சாலை  புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. சத்தியமங்கலம் - அத்தாணி மாநில நெடுஞ்சாலையில், தனியார் சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு வாழைக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்நிலையில், கேரளாவுக்கு வாழைக்காய் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், அங்கு வாழைக்காய்களை இறக்கிவிட்டு, வாழை சருகுகளை இரவு நேரத்தில் கொட்டி விட்டு, தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்