இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் - கண்டனம் தெரிவித்து கடையடைப்பு போராட்டம்

கோவை இந்து முன்னனி நிர்வாகி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் - கண்டனம் தெரிவித்து கடையடைப்பு போராட்டம்
x
கோவை இந்து முன்னனி நிர்வாகி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயலாளரான ஆனந்த் சிஏஏவுக்கு ஆதரவாக நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் போது பின்னால் 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் ஆனந்த் தலையில் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஆனந்த்-க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து, கிணத்துக்கடவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்