பேருந்து நிலையத்தில் கத்தியுடன் உலா - கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

செங்கம் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேருந்து நிலையத்தில் கத்தியுடன் உலா - கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் கையில் கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் சிலர் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மக்களுக்கு இடையூறு  செய்யும் வகையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடிய நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பஸ்டே கொண்டாடுவதற்காக இதுபோல் கத்தியுடன் சுற்றியதாக கைதானவர்கள் தெரிவித்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்