சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் வேதனை- அரசு உதவி செய்ய வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் வேதனை- அரசு உதவி செய்ய வலியுறுத்தல்
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் , 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமாக விவசாயிகளிடம் இருந்து கரும்புகள் பெறும் குரும்பூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. நிர்வாக சிக்கல் காரணமாக கரும்பு ஆலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. சரியான தருணத்தில் அறுவடை செய்யப்படாத காரணத்தால் கரும்புகள் காய்ந்து போய் உள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்