சட்டவிரோதமாக செயல்படும் மதுக்கடைகள் - பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை

ஓமலூரில் சட்டவிரோதமாக செயல்படும் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோதமாக செயல்படும் மதுக்கடைகள் - பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை
x
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி, கருப்பூர் ஆகிய வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மொத்தம் 16 அரசு மதுபான கடைகள் உள்ளன. இதுதவிர, ஓமலூர் மற்றும் தாரமங்கலம் பேருந்து நிலையம், செம்மண்கூடல், பச்சனம்பட்டி, செம்மாண்டபட்டி, காடையாம்பட்டி உட்பட சுமார் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோத மது விற்பனை செய்யும் சந்து கடைகள் இயங்கி வருகின்றன. வீடுகள், கடைகள், முட்புதர் உள்ளிட்ட மறைவிடங்கள் ஆகிய இடங்களில் தாராளமாக பலவகை மதுபானங்களும் அதிகாலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக போதைக்காக கலப்படம் செய்து மிக அதிக விலைக்கு விற்பனை செய்யபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. தொடர்ந்து 24-மணி நேரமும் தடையின்றி மது விற்பனை நடைபெறுவதால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் கூறுகின்றனர். மேலும், குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள்  அதிகாலை முதலே தொடங்கி விடுவதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர். குடித்துவிட்டு நடைபாதை கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்கள் மற்றும் சாலைகளில் செல்வோருக்கும் இந்த குடிமகன்களால் மிகுந்த இடையூறு ஏற்பட்டு வரும் நிலையில், காவல் மற்றும் வருவாய் துறை விரைந்து செயல்பட்டு குடிமகன்களின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதவிர, அனுமதியின்றி செயல்படும் சந்து கடைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்