தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா? - 3 பெண் நீதிபதிகள் அமர்வு விசாரணை

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா என்பது குறித்த விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா? - 3 பெண் நீதிபதிகள் அமர்வு விசாரணை
x
கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும் எனக் கூறி, தமிழக அரசு 2010ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது.இதை எதிர்த்து அகில் இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்று கல்வி நிறுவனங்களின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகள் வேறுபட்ட தீர்ப்பை அளித்த நிலையில்,  இந்த வழக்கை  மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டார்.அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை நேற்று விசாரித்தது. நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நீதிபதி அனிதா சுமந்த், நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா, இல்லையா என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என வாதிட்டார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா இல்லையா என்பது மட்டுமல்லாமல் பல சட்ட கேள்விகள் இந்த வழக்கில் எழுப்பப்பட்டு உள்ளதாக வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்