மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆலையை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

* இதையடுத்து கேன் குடிநீர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


* இந்நிலையில் வழக்கின் விசாரணை, இன்று வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

* வாதங்களை கேட்ட நீதிபதிகள், மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

* விண்ணப்பத்தோடு, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

* மேலும், சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க, அனைத்து மாவட்டங்களிலும் 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

* குடிநீர் ஆலைகள் மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் பிற தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


* அனைத்து மாவட்டங்களிலும், நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

* இந்நிலையில் தீர்ப்பின் எதிரொலியாக, கேன் குடிநீர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்