கொரோனா அச்சம் - கோழி வர்த்தகம் வீழ்ச்சி

கொரோனா அச்சம் கோழிக்கறி விற்பனையை அதல பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.
கொரோனா அச்சம் - கோழி வர்த்தகம் வீழ்ச்சி
x
சமூக வலைதளங்கள் நிறைய நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டு வரும் நிலையில், அதன் மூலம் பரப்பப்படும் வதந்தி அதை விட வேகமாக பரவுகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம்  கொரோனோ வைரஸ், பிராய்லர் கோழி இறைச்சி மூலம் பரவுகிறது என்பது தான்.

முதலில் தெலங்கானாவில் வாட்ஸப் மூலம் இந்த செய்தி பரப்பப்பட்டது. 
நாடு முழுவதும் வேகமாக இந்த செய்தி பரவியதால், கோழிக்கறி விற்பனை சரிவடைந்ததுடன் அதன் விலையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் பண்ணையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் பரப்பிய செய்தி காட்டு தீயாக பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் கறிக்கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தெலங்கானா மாநில அமைச்சர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மக்களுடன் சேர்ந்து கோழி இறைச்சியில் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வதந்திகளால் ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய கோழி வளர்ப்போர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்