"கலாச்சாரத்தை காக்க திமுக போராடும்" - ஸ்டாலின்

தமிழர்களின் நாகரிகம், கலாச்சாரத்தை பறைசாற்றும் கோயில்களை காக்க, மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கலாச்சாரத்தை காக்க திமுக போராடும் - ஸ்டாலின்
x
அவர் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை, மறு ஆய்வு செய்ய உள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்துள்ளதாக கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது என்ற ஸ்டாலின், இது,  மத்திய - மாநில உறவுகளுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.திருக்கோயில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து, வட நாட்டவருக்கு தாரை வார்க்கும் முயற்சிக்கு வழி வகுக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் கோயில்களை காக்க, திமுக போராட்டம் நடத்தும் என்றும், மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்