"படுத்தால் சாலை நடுவில் தான் படுப்பேன்" மதுபோதையில் கலாட்டா - பொதுமக்கள் அவதி

மது போதையில் குடிமகன் ஒருவர் படுத்தால் சாலையின் நடுவில் தான் படுப்பேன் என அடம் பிடித்து தூங்கியதால் வாகன ஓட்டுனர்கள் செய்வது அறியாமல் தவித்தனர்.
படுத்தால் சாலை நடுவில் தான் படுப்பேன் மதுபோதையில் கலாட்டா - பொதுமக்கள் அவதி
x
பார்த்தவுடன் சிரிப்பை ஏற்படுத்தினாலும், மனதுக்கு வேதனை அளிக்கும் இந்த காட்சி தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் நடந்தது தான்.. அங்குள்ள வள்ளுவர் சிலைக்கு பின்புறம் ஒன்றுக்கு இரண்டு அரசு மதுபானக்கடைகள் உள்ளன. இங்கு மது அருந்திய குடிமகன் ஒருவர் சாலையின் நடுவில் ஓய்யாரமாக படுத்து தூங்கியுள்ளார்.

மது போதையில் படுத்து இருக்கும் அந்த குடிமகனை சாலையில் செல்பவர்கள், தூக்கி சென்று சாலை ஓரம் படுக்க வைத்தாலும், மீண்டும் அவர், சாலையின் நடுவில் சென்று படுத்துக் கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் , அவர் கேட்கவில்லை. இதனையடுத்து பொதுமக்கள் சிலர் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று சாலையோரம் போட்டனர். மதுபோதையில் இவர் செய்த கலாட்டா, பொதுமக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது. Next Story

மேலும் செய்திகள்