பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - ஒரு மாணவனை பிடித்து போலீஸ் விசாரணை

சென்னை மதுரவாயலில், பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - ஒரு மாணவனை பிடித்து போலீஸ் விசாரணை
x
மதுரவாயலை சேர்ந்த கல்லூரி மாணவர் யுவராஜின் பிறந்தநாள் நேற்றிரவு கொண்டாடப்பட்டது. பெரிய மாலை அணிந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் மாணவர் முகம் மற்றும் தலையில் நண்பர்கள் முட்டை அடித்து உடைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், மாணவர் யுவராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி பினு, சட்டக் கல்லூரி மாணவர் காமேஷ், முன்னாள் ரூட் தல புவனேஷ் என தொடர்ந்து அதிகரித்து வரும் பட்டாக்கத்தி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்