ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை - வியாபாரிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

மதுரை கரிமேடு சந்தையில், ரசாயனம் கலந்த 2 ஆயிரம் கிலோ மீன்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை - வியாபாரிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
x
கரிமேடு இறைச்சி சந்தையில், ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து சந்தைக்கு விரைந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 56 மீன் அங்காடிகளில் சோதனை மேற்கொண்டனர். ஆய்வக உதவியாளர்கள், மீன் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், ரசாயனம் கலப்பு கண்டறியப்பட்டது. உடனடியாக 2 டன் மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டால், கடையின் உரிமம் பறிக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்