குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 10ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 10ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சிஏஏ, என்ஆர்சி ஆகிய சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்தால் மட்டுமே, போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என தெரிவித்தார். மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர் கூறுவது திருப்தியளிக்கும் வகையில் இல்லை என கூறினார்.

கன்னியாகுமரி : சிஏஏ-க்கு எதிராக இரவிலும் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மனோ தங்கராஜ் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். 

நாகை : சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி, நாகை மாவட்டம் நாகூரில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..Next Story

மேலும் செய்திகள்