புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை - இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை - இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு
x
கடந்த 15ந்தேதி ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்க  சென்ற அவர்களை  நெடுந்தீவு  கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட்ட அவர்கள் விசாரணைக்கு பின் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கை விசாரித்த  ஊர்காவல்துறை நீதிமன்றம் , இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தல் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து நிபந்தனைகளுடன் 8மீனவர்களையும்    விடுதலை உத்தரவிட்டார்.அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம்  திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.Next Story

மேலும் செய்திகள்