திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவ விழா - மார்ச் 5-ல் தேரோட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவ விழா - மார்ச் 5-ல் தேரோட்டம்
x
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், மார்ச் 5ஆம் தேதி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்