"இனிப்புகள் காலாவதி தேதி அறிவிக்க வேண்டும்" : உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு

இனிப்பு விற்பனையாளர்கள் அவற்றின் காலாவதி தேதியை கடைகளில் அறிவிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இனிப்புகள் காலாவதி தேதி அறிவிக்க வேண்டும் : உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு
x
இனிப்பு விற்பனையாளர்கள் அவற்றின் காலாவதி தேதியை கடைகளில் அறிவிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.  புதிய விதிமுறையின் படி, கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளின், உற்பத்தி தேதி, காலாவதி தேதிகளை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்