"எம்.பி.க்கள் தொகுதி நிதியை அதிகரிக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் எம்.பி. வேண்டுகோள்
தொகுதி வளர்ச்சி நிதியை மத்திய அரசு அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொகுதி வளர்ச்சி நிதியை மத்திய அரசு அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும், அப்போது தான் மத்திய அரசின் நிதி மக்களுக்கு சென்றடையும் என்றும் தெரிவித்துள்ளார். தொகுதி வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்படும் 5 கோடி ரூபாயை கொண்டு மக்களை திருப்திப் படுத்த முடியாது என்றும், அந்த நிதியை மத்திய அரசு அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story