காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கு - வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டையில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கு - வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு
x
புதுக்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கணேசன், கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போன தனது 17 வயது மகனை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்