"பலா, வாழை இங்கே - மாம்பழம் எங்கே?" ராமதாஸ் டுவிட்டர் - தி.மு.க. எம்.பி. விமர்சனம்

சமூக வலைதளத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஒரு பதிவுக்கு தி.மு.க. எம்.பி செந்தில்குமார் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
பலா, வாழை இங்கே - மாம்பழம் எங்கே? ராமதாஸ் டுவிட்டர் - தி.மு.க. எம்.பி. விமர்சனம்
x
சமூக வலைதளத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஒரு பதிவுக்கு தி.மு.க. எம்.பி செந்தில்குமார் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் முக்கனிகளில் இரு கனிகளைத் தரும் பலா, வாழை மரங்கள் இருக்கின்றன என குறிப்பிட்டு, ராமதாஸ் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. செந்தில்குமார், பலா, வாழை உங்க தோட்டத்தில் இருக்கு, மாம்பழம் எங்கே? என கேட்டுள்ளார். உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கவில்லையா? என, கிண்டலாக கேட்டுள்ள திமுக எம்.பி. செந்தில்குமார், சின்னத்தை மாற்றி விடலாமா? என்றும் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்