வெங்காய ஏற்றுமதி தடையை நீக்க மத்திய அரசு முடிவு - நடப்பாண்டில் சாகுபடி அதிகரிக்கும் என தகவல்

வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெங்காய ஏற்றுமதி தடையை நீக்க மத்திய அரசு முடிவு - நடப்பாண்டில் சாகுபடி அதிகரிக்கும் என தகவல்
x
வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எட்டப்பட்டதாக,  உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு மார்ச் மாத பருவத்தில் 40 லட்சம் டன் வெங்காயம் சாகுபடி செய்யப்படும் என்றும், கடந்த ஆண்டு 28 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் பாஸ்வான் தெரிவித்திருந்தார். விலை ஏற்றம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், வெங்காயம் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்