இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு-க்கு வீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
x
சென்னை தியாகராயநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நல்லகண்ணு வசித்து வந்தார். 1953-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த குடியிருப்பு மிகவும் பழுதாகி இருந்ததால், அங்கு வசித்தவர்களை, காலி செய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டது. பொது ஒதுக்கீட்டில் குடியிருப்போருக்கு வேறு வீடு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து நல்லகண்ணு, அவரது வீட்டை காலி செய்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், நல்லகண்ணுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு வீடு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இதுதொடர்பாக அரசாணை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சென்னை நந்தனம் பகுதியில் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்