எம்.ஆர்.பி.யை விட கூடுதலாக ரூ.2 வசூல் - சூப்பர் மார்க்கெட்டிற்கு ரூ.15,000 அபராதம்

எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக இரண்டு ரூபாய் வசூலித்த தனியார் சூப்பர் மார்க்கெட்டிற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எம்.ஆர்.பி.யை விட கூடுதலாக ரூ.2 வசூல் - சூப்பர் மார்க்கெட்டிற்கு ரூ.15,000 அபராதம்
x
எம்.ஆர்.பி. விலையை விட, கூடுதலாக இரண்டு ரூபாய் வசூலித்த தனியார் சூப்பர் மார்க்கெட்டிற்கு, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத்தியபாமா என்பவர் தொடர்ந்த வழக்கு 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நுகர்வோர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், அபராத தொகையை சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் கட்டத் தவறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்