கடனை திரும்ப செலுத்த வங்கி நெருக்கடி : வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் - விஷம் குடித்து விவசாயி தற்கொலை

வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாததால் மனம் உடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கடனை திரும்ப செலுத்த வங்கி நெருக்கடி : வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் - விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
ஆண்டிப்பட்டி அருகே சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம் தனியார் வங்கியில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். போதிய விளைச்சல் இருந்தும் உரிய லாபம் கிடைக்காததால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என தெரிகிறது. கடனை திரும்ப செலுத்துமாறு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த வங்கி அதிகாரிகள், வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் அனுப்பினர். இதனால் மனம் உடைந்த விவசாயி தர்மலிங்கம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் நெருக்கடியால், விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்