திமுக எம்.பி பார்த்திபனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம் மக்களவை தொகுதி திமுக எம்.பி பார்த்திபன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்.பி பார்த்திபனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சேலம் மக்களவை தொகுதி திமுக எம்.பி பார்த்திபன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சுயேட்சை வேட்பாளர் பிரவீணா தாக்கல் செய்த மனு, நீதிபதி பி.டி.ஆஷா, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பார்த்திபன் தரப்பில் தம்மை துன்புறுத்தும் நோக்கில் மனுதாரர் வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்