"சிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன?" - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் உள்ள பழங்கால சிலைகளை பாதுகாக்க எடுக்கப்ப்பட்டு வரும் நடவடிக்கை என்ன என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
x
பொன் மாணிக்கவேல், மீட்ட சிலைகள் குறித்த அறிக்கையின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க சிபிசிஐடியில் தனிப்படை அமைக்க கோரிய வழக்கில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள பழங்கால சிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்னென்ன என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அப்போது, கோவில்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை மணி அடங்கிய பாதுகாப்பு அறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், 31 ஆயிரம் கோயில்களில் உள்ள 3 லட்சத்து 31 ஆயிரம் சிலைகள் புகைப்படம் எடுக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்களை, பொன் மாணிக்கவேல் அரசிடம் ஒப்படைக்கவில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள், வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்