ரூ.3,000 லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி - 2 நாட்களில் ஓய்வு பெறும் நிலையில் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு நாட்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், லஞ்சம் கேட்டு, போலீசாரிடம் சிக்கினார்.
ரூ.3,000 லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி - 2 நாட்களில் ஓய்வு பெறும் நிலையில் கைது
x
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு நாட்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், லஞ்சம் கேட்டு, போலீசாரிடம் சிக்கினார். விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜ், தமது மகள் திருமணத்திற்காக  சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயபாரதியிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார். அப்போது ஜெயபாரதி 3 ஆயிரம்  ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து கோவிந்தராஜ்  கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.அப்போது போலீசார் அறிவுறுத்தலின் படி   ரசாயனம் தடவிய பணத்தை கோவிந்தராஜ்  ஜெயபாரதியிடம் வழங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜெயபாரதியை கைது செய்தனர். 
இன்னும் இரண்டு நாட்களில் ஜெயபாரதி ஓய்வுபெற உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்