கோவில் உண்டியலில் திருட முயன்ற இளைஞர் - கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்

கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
கோவில் உண்டியலில் திருட முயன்ற இளைஞர் - கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்
x
கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். போத்தனூர் அடுத்த அண்ணாபுரத்தில் உள்ள அக்னி மாரியம்மன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதிப்பதை கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர். விசாரித்த‌தில் அந்த நபர் கோவையை சேர்ந்த ஆசாத் என்பதும் கோவில் உண்டியலில் திருட வந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், தர்ம அடி கொடுக்க, தகவலறிந்து வந்த போலீசார், அவரை மீட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்