துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக கவுன்சிலர்

தேனி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் ஒருவர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக கவுன்சிலர்
x
தேனி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் ஒருவர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் அதிமுக, திமுக தலா 7 இடங்களில் வெற்றி பெற்றதால் ஒன்றியக்குழுத் தலைவர்,  துணைத்தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இரண்டு முறை தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் திமுகவை சேர்ந்த 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்  தமிழ்செல்வன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து கடமலை மயிலை ஒன்றியத்தில் அதிமுக பலம் 8 ஆக உயர்ந்தது. Next Story

மேலும் செய்திகள்