உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீ - தீவிர முயற்சிக்கு பின் தீ கட்டுக்குள் வந்தது

கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டை உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீயை வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்
உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீ - தீவிர முயற்சிக்கு பின் தீ கட்டுக்குள் வந்தது
x
கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டை உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீயை வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு  கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பூங்காவில் உள்ள மான்கள் உள்ளிட்ட உயிரினங்களும் , மயில்கள் போன்ற பறவைகளும் உயிர் தப்பின. கோட்டையின் பல பகுதிகளில் பரவிய தீயை  பொதுமக்கள் உதவியோடு வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் போராடி அணைத்தனர்.  மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என விசாரணை மேற்கொண்டு வரும் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்