2018-19 ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் முறைகேடு : "சென்னை மருத்துவக் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவரிடம் சிபிசிஐடி விசாரணை

கடந்த 2018 -19 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடு செய்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படித்து வருவதாக சிபிசிஐடி புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
2018-19 ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் முறைகேடு : சென்னை மருத்துவக் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவரிடம் சிபிசிஐடி விசாரணை
x
சென்னை மருத்துவ கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி அளித்த புகாரின் அடிப்படையில்,சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் தனுஷ் என்பவரையும், அவருடைய தந்தையையும் இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தேனி மருத்துவக்கல்லூரியின் முதல்வர், மாணவர் உதித்சூர்யா என்பவர் நீட் தேர்வில்  முறைகேடு செய்து  மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அளித்த புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 2018 -19 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்