கீழடி அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் - பார்வையாளர்களுக்காக புகைப்பட கண்காட்சி அமைப்பு

கீழடி செல்லும் பார்வையாளர்கள் காண்பதற்காக புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் - பார்வையாளர்களுக்காக புகைப்பட கண்காட்சி அமைப்பு
x
சிவகங்கை மாவட்டம் கீழடியில்  6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு  4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 6 ம் கட்ட அகழாய்வில் பானை ஓடுகள் தவிர வேறு பொருட்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கீழடிக்கு வரும் ஏராளமான பார்வையாளர்கள் காண்பதற்காக அங்கு புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.   

4 மற்றும் 5 ம் கட்ட அகழாய்வில் கிடைத்த வட்டப்பானை, தண்ணீர் தொட்டி, சுடுமண் குழாய், வராஹி உருவம் பதித்த சூதுபவளம், நீண்ட தரைதளம், இரட்டைச்சுவர் உள்ளிட்டவைகளின்  புகைப்படங்கள் பிளக்ஸ் போர்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களில் இருக்கும் பொருட்களை  நேரில் காண தொல்லியல்துறை ஏற்பாடு செய்தால் மேலும் நன்றாக இருக்கும் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்