டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிறைக்குள் இருந்தபடி ஆடியோ வெளியிட்ட யுவராஜ் - அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகும் என பேட்டி

சிறைக்குள் இருந்த யுவராஜின் ஆடியோ வெளியான நிலையில் விஷ்ணுபிரியாவின் மரணம் தொடர்பாக அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகும் என நீதிமன்றத்தில் ஆஜரான அவர் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிறைக்குள் இருந்தபடி ஆடியோ வெளியிட்ட யுவராஜ் - அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகும் என பேட்டி
x
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் 2018 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறைக்குள் இருந்தபடியே யுவராஜ் பேசி அனுப்பியதாக ஒரு ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பேசிய யுவராஜ், ஆடியோவில் பேசிய அனைத்தும் உண்மை என்றும், டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக அடுத்தடுத்த ஆடியோ வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்