மயானக் கொள்ளை நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயானக் கொள்ளை நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
x
பல்வேறு கடவுள்களின் வேடத்தில் ஆவேச நடனம் - மேளதாளம் முழங்க பக்தர்கள் நேர்த்திக் கடன்



காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 24 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சப்பரம் மாட வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில், ராட்சத கிரேன்கள் மூலம் பறவைக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்தும், கடவுள்களின் வேடத்தில் வந்தும், மேளதாளம் முழங்க பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மயான கொள்ளை உற்சவத்தில் காளியம்மன்



மாமல்லபுரத்தில் உள்ள நவஜெயகாளியம்மன் கோயிலில் மயான கொள்ளை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அங்காளம்மன், முனியப்பன், காட்டேரி வேடமணிந்த பக்தர்கள், சுடுகாடு நோக்கி ஊர்வலம் சென்றனர். அங்கு வந்த வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் சிலர், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


மயான கொள்ளை : எலும்புகளை சாப்பிட்ட பூசாரி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு




கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிவம்பட்டி பூங்காவனத்தம்மன் கோயிலில், மயான கொள்ளை திருவிழா களைகட்டியது. ஆவேசமாக மயானத்துக்கு சென்ற பூசாரி, எலும்புகளை வாயால் கவ்வி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

அம்மன் சிலைகள் ஊர்வலம் - பக்தர்கள் பரவசம்



திருவண்ணாமலையில் சிவன்பட வீதி, தண்டராம்பட்டு சாலை மற்றும் புதுவாணியம்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலமாக வந்தன. இதில், பங்கேற்ற பக்தர்கள், கடவுள்களின் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

திருத்தணி : பல்வேறு கடவுள்களின் வேடங்களில் வந்த பக்தர்கள்



திருத்தணியில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பல்வேறு வேடம் அணிந்தும், உடலில் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பம்பை, தவில், நையாண்டி மேளம் முழங்க பக்தர்கள் உற்சாக நடமாடினர்.




Next Story

மேலும் செய்திகள்