குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 13- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்
x
ஆற்றுமேட்டில் 5-நாளாக தொடரும் போராட்டம் - பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்று மேடு பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அணைத்து கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இஸ்லாமிய அமைப்புகள், பெண்கள் மற்றும் ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரவு நேரங்களில், தங்கள் செல்போன் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.  மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். 

13- வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  இஸ்லாமியர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 13- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகுளம் ரஹமத் மஸ்ஜித் பள்ளி வாசல்  முன்பாக இரவு, பகலாக  நடந்த வரும் இந்த போராட்டத்தில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு



புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிராக இஸ்லாமியர்கள் ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கறம்பகுடி மதரஸா பள்ளிவாசல் அருகே நடைபெற்று போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் இந்த சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தைக் கூட்டி சட்டம் நிறைவேற்ற வேண்டும் என​வும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்