"படிப்படியாக 1, 453 டாஸ்மாக் கடைகள் குறைப்பு" - அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகத்தில் படிப்படியாக இதுவரை ஆயிரத்து 453 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
படிப்படியாக 1, 453 டாஸ்மாக் கடைகள் குறைப்பு - அமைச்சர் தங்கமணி தகவல்
x
தமிழகத்தில் படிப்படியாக இதுவரை ஆயிரத்து 453 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சின்னமணலி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 6 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல் மாவட்ட ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் திட்டத்திற்கு விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார். தமிழகத்தில் மொத்தம் ஆறாயிரத்து 715 டாஸ்மாக் கடைகள் இருந்தாக கூறிய அவர், அவற்றை படிப்படியாக குறைத்து, தற்போது ஐந்தாயிரத்து 262 கடைகள் உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்