சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா : விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா வரும் 22 ஆம்தேதி நடைபெற உள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா : விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
x
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா  திருச்செந்தூரில் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.இந்நிலையில், விழா நடைபெறும் இடத்தை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார். மேலும் விழாவுக்கான ஏற்பாடுகள், போக்குவரத்து மற்றும் இதர வசதிகள் குறித்து  தென்மண்டல காவல் துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன்,  மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி உள்ளிட்டோருடன் அமைச்சர்  ஆலோசனை மேற்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்