ஏ.டி.எம் மையத்தில் விவசாயியை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்த இளைஞர் கைது

விழுப்புரத்தில் , ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்த விவசாயியை ஏமாற்றி கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம் மையத்தில் விவசாயியை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்த இளைஞர் கைது
x
சில நாட்களுக்கு முன் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் கருங்காலிப்பாடு கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது பணம் எடுக்க உதவுவது போல் மர்ம நபர் ஒருவர் சக்கரவர்த்தியை ஏமாற்றி 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் , தனியார் ஏ.டி.எம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்நிலையில் சக்கரவர்த்தியிடம் கொள்ளையடித்த கலையநல்லூரை சேர்ந்த வீராசாமியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்