விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு : காவல் ஆய்வாளர் மீதான ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு

விசாரணைக் கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு : காவல் ஆய்வாளர் மீதான ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு
x
ராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் காளிதாஸ் என்பவர், தாக்கல் செய்த மனுவில், தற்காப்புக்காக தாம் விசாரணை கைதியை சுட்டதாகவும் எனவே தம்மை ஆயுள்தண்டனையில் இருந்து விடுவிக்க ​வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. காவல் ஆய்வாளர் காளிதாஸின் தண்டனையை நிறுத்தி வைத்து  உத்தரவிட்டனர். காவல் ஆய்வாளர் காளிதாஸ், திருச்சியில் தங்கி, நீதித்துறை நடுவர் முன்பு தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்