சி.ஏ.ஏ-விற்கு எதிர்ப்பு - இஸ்லாமியர்கள் போராட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
மதுரை

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, மதுரையில் ஜமாத்துல் உலமாக்கள் சபை சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் NRCக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர். 

கடலூர்

கடலூரிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்,  அண்ணா பாலத்தில் இருந்து பேரணியாக சென்றனர். 

நாகர்கோவில்

தமிழக உலமாக்கள் பேரவை சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக, வாகன நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் இருந்து 2  ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். போராட்டத்தில் சி.ஏ.ஏ - விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

வேலூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியானதால் 500 - க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

விழுப்புரம்

விழுப்புரத்திலும் CAA,  NRC , NPR ஆகியவற்றிக்கு எதிராக, இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இந்த சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டன. 


திருவாரூர் 

திருவாரூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இஸ்லாமியர்களை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பின்னர், தங்களது கோரிக்கைகளை மனுவாக, மாவட்ட ஆட்சியரிடம் அளித்து விட்டு, தடுத்து நிறுத்தபட்ட திருவாரூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையிலேயே  இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


தேனி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜமாஅத்துல் உலமா சபையை சேர்ந்த இஸ்லாமியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்