குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 23 இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஒருநாள் அடையாள போராட்டம் முடிவுக்கு வந்தது.
x
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இஸ்லாமிய அமைப்புகள் அ.தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இது தொடர்பாக அந்த அமைப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தங்களது கோரிக்கையை தெரிவித்திருந்தன. இதனிடையே, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, பேரவை தலைவர் சபாநாயகர் தனபால் நேற்று தெரிவித்தார். இதனிடையே, சட்டப்பேரவையை  முற்றுகையிடும் போராட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் அனுமதி கோரிய நிலையில், அதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர் . இந்நிலையில் இன்று காலை சேப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, ஆணையர் தலைமையில் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில், தங்களது ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலி​யுறுத்தி 23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்திய அடையாள போராட்டம் 12.40 மணி அளவில் நிறைவுக்கு வந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தேசியக் கீதம் பாடியதால் சிறிது நேரம் அமைதியான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்